Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இறந்து கிடந்த இருவர்… தற்கொலை செய்து கொண்டார்களா?.. போலீசார் விசாரணை..!!

சேலம் அரசு மருத்துவமனைக்கு முன்பு இரு நபர்கள் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகே இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோய் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். சென்ற ஒரு மாதமாக வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரிந்து உள்ளனர். இந்த நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் எதிரில் இருவரும் உயிர் இழந்து சடலமாக கிடந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இருவரும் உயிரிழந்து கிடந்த இடத்தில் கண்டறியப்பட்ட குளிர்பான பாட்டில்களின் மூலம் இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை வேறு காரணத்தால் இறந்துள்ளார்கள் என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |