கர்ப்பிணி பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் மீது அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கணபதிபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 40 வயதுடைய ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பிரசவத்திற்காக வந்த ஒரு பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றும் அந்த பெண்ணின் கற்பவையும் பாதிப்புக்குள் ஆகி உள்ளது. மேலும் இவர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் , பெண்கள் உள்ளிட்ட பலருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதனால் அந்த மருத்துவர் அங்கிருந்து வேறு இடத்திற்கு தற்காலிகமாக பணி மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகளை நியமிக்க உத்தரவிட்டது. அதனால் நோய் தடுப்பு மருத்துவ துறை கூடுதல் இயக்குனர் சித்ரா தலைமையிலான பாலியல் ரீதியான விசாரணை முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வைத்து அந்த மருத்துவரிடமும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தியது. மேலும் தளபதிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் என மொத்தம் 12-க்கும் மேற்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிலர் மருத்துவருக்கு எதிராகவும், சிலர் மருத்துவவருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளனர். இதனை அந்த குழுவினர் பதிவு செய்து கொண்டு விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து சம்பவம் குமரி மாவட்ட சுகாதாரத்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.