தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் 76 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 3 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 6 பி.டி.எஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 375 பி.டி.எஸ் இடங்களும் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.