நகரங்களில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த புகையால் சுற்றுசூழல் பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் ஏரளமான எலெக்ட்ரிக் வாகனங்கள் களமிறங்கி இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்கமும் மானியங்களை வழங்கி வருகிறது, தற்போது இதுவரை எலெக்ட்ரிக் பைக் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை மூன்று மடங்காக உயர்த்த இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பட்ஜெட்டாக்குமெண்ட் தகவலின்படி, 2023ம் நிதியாண்டில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் அடாப்ஷன் மற்றும் தயாரிப்புக்கு ரூ.2,908 கோடி ஒதுக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2021ல் மானியமாக வழங்கப்பட்ட ரூ.800 கோடியை விட மூன்றரை மடங்கு அதிகம் மற்றும் எஃப்ஒய்21ஐ விட ஒன்பது மடங்கு அதிகமாகும்.நாளுக்கு நாள் எலெக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரிப்பதை கருத்திற்கொண்டு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அரசின் வஹான் போர்டல் அளித்த தகவலின்படி, கடந்த 2021ல் இந்தியா 311,000 பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களை (பிஓவி) ரிஜிஸ்டர் செய்திருந்தது, அதற்கு முந்தைய வருடம் இந்தியா 119,000 வாகனங்களை மட்டுமே ரிஜிஸ்டர் செய்திருந்தது. இந்நிலையில் இந்த ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பிஓவிக்களில் 95% இரண்டு மற்றும் மூன்று வாகனங்களே, கடந்த ஆண்டில் 4,936 என்ற அளவில் இருந்த இரண்டு சக்கர வாகனங்கள் இந்த 2022ம் ஆண்டின் முதல் ,மாதத்தில் 27,555 ஆக உயர்ந்துள்ளது.
FAME-2 திட்டத்தின் வருகைக்கு பிறகு எலெக்ட்ரிக் பைக்குகளின் வேகம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திடம் பல முறை கோரிக்கை விடுத்த பிறகு தான் அதிக மானியங்களை வழங்குவதற்கு இந்த FAME-2 திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது என்று தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் இருசக்கர வாகனகளுக்கான ஊக்கத்தொகையை ரூ.10,000லிருந்து ரூ.15,000 ஆக அரசாங்கம் உயர்த்தியிருக்கிறது, இதன் மூலம் இதன் வரம்பு 20%லிருந்து 40% ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்த திட்டத்தில் 200,000 வாகனங்கள் ஆதரிக்கப்பட்டுள்ளது, கடந்த மூன்று வருடங்களில் எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு மானியமாக ரூ.900 கோடி வழங்கப்பட்டது. FAME-2 திட்டமானது 2022ம் ஆண்டில் மார்ச்-31ம் தேதி முடிவடையும் என்று கூறப்பட்ட நிலையில், இது மார்ச்-31, 2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.