Categories
மாநில செய்திகள்

அரசு முதுகலை ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றது. அவ்வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் சீனியாரிட்டி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள்.

இதையடுத்து மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பள்ளிகளின் தரம் மேம்படும் அதன் மூலமாக பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2013 -2014ஆம் கல்வியாண்டில் 100 அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி உயர்நிலை பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்து உத்தரவிட்டது.

அவ்வாறு தரம் உயர்த்தப்ட்ட 100 பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், பொருளியல், உயிரியல், வரலாறு, வணிகவியல் ஆகிய 9 பாடங்களுக்கும் 9 ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 ஆசிரியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த தற்காலிக பணி நியமனமானது கடந்த 2018 முதல் கடந்த ஜூன் 2021 வரை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஜூலை 2021 முதல் ஜூன் 2024 வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அவர்களுக்கு இந்த நவம்பர் மாதம் ஊதியம் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |