Categories
மாநில செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு….. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உள்ள மேல்நிலை பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்பில் படிக்கும் 40 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் பாடம் நடத்த வேண்டும். இதில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பொருத்தவரை குறைந்தபட்சம் 30 மாணவர்களும், ஊராட்சி பகுதிகளில் குறைந்தபட்சம் 15 மாணவர்களும் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்கள் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒருவேளை மேல்நிலை பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் அந்த பாடத்திட்டங்களை நீக்கிவிட்டு, அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதன் பிறகு ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யும் போது, ஒரு ஆசிரியருக்கு வாரத்துக்கு 28 பாட வேளைகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதனையடுத்து போதிய அளவுக்கு பாடவேளை இல்லாத முதுநிலை ஆசிரியர்களுக்கு 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாட வேளைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது தொடர்பான புள்ளி விவரங்களை பள்ளிகள் தயார் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செப்டம்பர் 26 முதல் 30-ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப வேண்டும்.

Categories

Tech |