Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“அரசு விடுதியில் தங்கி பயில வேண்டும்”…. ஆட்சியரிடம் மனு கொடுத்த மாணவர்கள்”….!!!!!!

அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர். தலைமை தாங்கி மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார் அப்பொழுது பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணறியியல் உள்ளிட்ட துறைகளில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து பயிலும் மாணவர்கள் சார்பாக ஆட்சியரிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் வந்து கல்லூரிக்கு படிக்க முடியாததாலும் போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளதாலும் தற்பொழுது வாடகைக்கு அறை எடுத்து தங்கி இருக்கின்றோம். ஆனால் சாப்பாடு செலவு, அறை செலவு அதிகமாக இருக்கின்றது. இதனால் நாங்கள் அரசு விடுதியில் தங்கி பயில்வதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்கள்.

Categories

Tech |