Categories
மாநில செய்திகள்

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை….. முழு கட்டண விவரம் இதோ….!!!

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்குகிறது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகின்றது. தமிழகத்தில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, கோயம்புத்தூர், ஓசூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை தொடங்குகிறது. இதில் 80 கிலோ எடைவரைப் பொருட்களை அனுப்ப 390 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பார்சல் அனுப்ப விரும்புபவர்கள் அருகில் உள்ள கிளை மேலாளரை அணுகலாம் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் சேவை கட்டண விவரம்.

*திருச்சி டூ சென்னை – ≈210

*ஓசூர் டூ சென்னை -210

* மதுரை டூ சென்னை – 300

*கோவை டூ சென்னை – 330

*நெல்லை டூ சென்னை – 390

*தூத்துக்கு டூ சென்னை – 390

*செங்கோட்டை டூ சென்னை – 390

*80 கிலோ வரை பார்சல்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |