6 குழந்தைகளை எரித்து கொன்ற தாயார் விடுவிக்கப்பட்டதால் அவரின் தாய் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் கடந்த 2013ஆம் வருடம் தீ விபத்தில் தன்னுடைய 6 குழந்தைகளை கொன்ற வழக்கில் 39 வயதான மைரேட் பில்போட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டிற்கு நெருப்பு வைத்து சேதப்படுத்தினால், அதன் சார்பாக அரசு புதிதாக வீடு கட்டி தரும் என்று எண்ணி சொந்த வீட்டிற்கு நெருப்பு வைத்துள்ளார். ஆனால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததால் தீ மளமளவென்று பரவி வீட்டினுள் சிக்கிய தங்களது பிள்ளைகளை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. இதையடுத்து அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் நடந்த ஓர் ஆண்டுக்குப் பின்னர் 2013இல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் தற்போது வெறும் ஆறு வருடங்களே தண்டனை அனுபவித்து உள்ள நிலையில் பில்போட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நீண்ட காலம் தண்டனை அளிப்பார் என்று நம்பியவர்கள் மற்றும் அவரது சொந்த தாயார் உட்பட அவர் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்ட்டுள்ளது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு கிடைத்த தண்டனை கிட்டத்தட்ட போதுமானதாக இல்லை .அவர் எந்த அந்த கொடூரத்தை செய்த பின் நாங்கள் அவளை ஏற்றுக் கொள்வதாக இல்லை எனவும் 62 வயதான பில்போட் தாயார் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து பில்போட் விடுதலை செய்யப்பட்டாலும் அவர் இனிமேல் குழந்தைகள் 6 பேரும் கொல்லப்பட்ட பகுதிக்கு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.