Categories
தேசிய செய்திகள்

அரசு வெளியிட்ட மிக மிக முக்கிய அறிவிப்பு… கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

நாட்டில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களை 50 சதவீத வருகைப் பதிவுடன் தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி கல்லூரிகளில் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்துவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் 50 சதவீத வருகை பதிவுடன் திறப்பதற்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே இருக்கின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறந்து கொள்ளலாம். மத்திய அரசு நிதி உதவி பெறுகின்ற கல்வி நிறுவனங்கள், வகுப்புகளை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்து முடிவு செய்யப்படும். மற்ற உயர்கல்வி நிறுவனங்கள் மாநில அரசுகளின் ஆலோசனையை ஏற்று வகுப்புகளை மீண்டும் திறப்பது பற்றி முடிவு செய்து கொள்ளலாம்.

மேலும் கல்லூரிகளில் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். கல்லூரிகளில் உள்ள விடுதிகள் தவிர்க்க முடியாத கட்டாய சூழலில் மட்டுமே திறக்க வேண்டும். கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக்கூடாது. மேலும் எந்தெந்த பகுதிகளில் கல்லூரிகளை திறக்கலாம் என்பது பற்றி மாநில அரசுகள் அறிக்கை வெளியிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |