Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு வேலையா….? கருணை கொலையா….? 5 நாட்களாக தொடரும் போராட்டம்….!!

அரசு வேலை கொடுக்காவிட்டால் கருணை கொலை செய்யுமாறு மாற்றுத்திறனாளிகள் 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பார்வை திறன் குறைந்து காணப்படும் மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வேண்டும் என தொடர்ந்து 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் பல துறைகளில் பட்டங்களை பெற்றனர் தங்கள் படிப்புக்கு ஏற்ற படி அரசு வேலை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிடில் தங்களை கருணை கொலை செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர். தங்களுக்கு எந்தவித கருணையும் அளிக்க தேவையில்லை எங்களின் படிப்புக்கு ஏற்ற படி அரசு வேலை வழங்கினால் போதும் என தெரிவித்துள்ளனர்.

இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் 5 நாட்களாக அமைச்சர்கள் முதலமைச்சர் செல்லும் வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவர்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. படிப்பில் திறமையாக இருக்கும் அவர்களுக்கு அரசு அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு அரசு வேலை வழங்கும் என எதிர்பார்க்க படுகிறது. பார்வை திறன் குறைந்தவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அவர்கள் செய்து காட்டியுள்ளனர்.

Categories

Tech |