சித்தா பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பூலாங்குளம் பகுதியில் மோசஸ் சுந்தர் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்த மருத்துவரான லில்லி ரோஸி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரோஸி அரசு வேலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அரசு வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.