Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

அரசு வேலை பிரியர்களே….. இதையும் கொஞ்சம் கவனிங்க….. ஊதிய உயர்வுடன் நிரந்திர வேலை….. தலைமை செயல் அதிகாரி அறிவிப்பு…..!!

எச்டிஎஃப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆதித்யா பூரி அவரது  நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இன்று பெரும்பாலானோர் அரசு வேலையை நோக்கி நகர நினைப்பதன் நோக்கம், பணிக்கான பாதுகாப்பு உறுதி தான். 56 வயது வரை எந்தப் பிரச்சினையும் இல்லாமல், நிறைவான மாத சம்பளத்துடன் வேலை போய்விடுமோ என்ற அச்சம் இல்லாமல், வாழ்க்கையை நடத்திச் செல்லலாம் என்பதற்காகவே. இந்நிலையில்,

எச்டிஎஃப்சி வங்கியில் தனியார் நிறுவனம் பெருமளவில் அறிவிக்காத ஒரு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. எச்டிஎஃப்சி வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, ஊதிய உயர்வு அளிக்கப்படும் என வங்கியின் தலைமை செயல் அதிகாரி ஆதித்யா பூரி அறிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில், வங்கியின் லாபத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார். 

Categories

Tech |