கரூர் மாவட்டத்திலுள்ள கந்தபொடிகார தெருவில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் புலியூர் புரவிபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் கணேசனிடம் ஆனந்த் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். இருவரும் பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தர முடியும் என கணேசனிடம் தெரிவித்தனர்.
இதனை நம்பி கணேசன் ஆனந்த் மற்றும் சரவணன் ஆகியோரிடம் 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்தனர். இது தொடர்பாக கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சரவணன் மற்றும் ஆனந்த் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.