Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்”… ஆத்தூர் தொகுதியில்… திமுக வேட்பாளர் சூறாவளி பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், ஆத்துப்பட்டி குடகனாற்றில் புதிய பாலம் கட்டித் தரப்படும். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட கிராமங்களில் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோர் அனைவருக்கும் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். பேரூராட்சி பகுதிகளில் தேசிய ஊரக வேலை திட்டம் செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு, கூலி ரூ.300 ஆக உயர்த்தப்படும். அரசு பணி இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள்-இளம்பெண்களுக்கு அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் முறையாக வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

Categories

Tech |