Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி”…. 2 பேர் கைது…!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 1 கோடியே 27 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் முனீஸ்வரன் என்பவரை சந்தித்து பேசும் பொழுது தனது நண்பர்கள் ரஞ்சித் குமார், பாண்டியராஜன் உள்ளிட்டடோர் கலெக்டரின் உதவியாளர்களுக்கு பழக்கமானவர்கள் என்பதால் அலுவலகத்தில் நிறைய காலி பணியிடங்கள் இருப்பதால் பிள்ளைகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதையடுத்து அதை செய்த நம்பி தனது மகன் மகளுக்கு உதவியாளர் வேலை வாங்கித் தருவதற்கு ரூபாய் 8 லட்சம் கொடுத்துள்ளார். பிறகு வேலை எப்பொழுது வரும் என கேட்ட பொழுது சில மாதங்களாகும் என கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் சென்ற 2019 ஆம் வருடம் நவம்பர் மாதம் வருவாய் துணை அலுவலர் பணிக்கு பயிற்சிக்கு வருமாறு கூறி போலியாக தயார் செய்யப்பட்ட ஒரு உத்தரவை கொடுத்திருக்கின்றார். இதனால் சேகர் வேலை கிடைத்ததாக எண்ணி தனது நண்பர்களின் உறவினர்களுக்கும் வேலை வாங்கித் தருமாறு 28 பேரிடம் ரூபாய் 1 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரம் வசூலித்து கொடுத்திருக்கின்றார். பின் நாட்கள் செல்ல செல்ல வேலை கிடைக்காததால் தொந்தரவு செய்ததையடுத்து போலி பணியாணையை தபால் மூலம் 28 பேருக்கும் அனுப்பியுள்ளனர்.

பின் ஆட்சியர் அலுவலக கேண்டீன் அருகில் இருக்கும் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் வைத்து பாண்டியராஜன், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அதிகாரிகள் போல் நேர்காணல் நடத்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைகளையும் பின் சான்றிதழ்கள், ஸ்மார்ட் கார்டு, போலீசார் சரிபார்ப்பு சான்றிதழ், மருத்துவர் சான்றிதழ் என அனைத்தையும் வாங்கி வைத்துக்கொண்டு நேர்காணலுக்கு பின்னர் அவரவர்களுக்கு வந்த இடத்தில் பணியில் சேருமாறு சொல்லி அனுப்பி வைத்திருக்கின்றனர். இவர்கள் சொன்ன இடத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு எந்த ஒரு பணியும் காலியாக இல்லை என அங்கிருந்து அவர்கள் தெரிவித்ததையடுத்து தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர்களிடம் பணத்தை திரும்ப கேட்ட பொழுது மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் சேகர் மத்திய குற்ற பிரிவு போலீஸில் சென்ற மாதம் புகார் அளித்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்திய வந்தனர். மூன்று பேரும் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |