Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அரசு வேலை வாங்கி தருகிறேன்”…3 கோடி பணம் மோசடி… அரசு அதிகாரி போல் நடித்து நேர்முகத்தேர்வு நடத்தியவர் கைது…!!!!!!!

மத்திய மாநில அரசு பள்ளிகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்து 3 கோடிக்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட மோகன் ராஜ் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவர் அரசு துறை அலுவலகங்களில் நேர்முகத்தேர்வு நடத்தி போலி பணி நியமன ஆணைகளை வழங்கி இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மேலும் இந்த மோசடி செயலில் அவருக்கு சென்னை சேத்துப்பட்டு மங்களபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

தலைமறைவாக இருந்த அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். மேலும் விசாரணையில் அவர் அரசு பணி நியமன அதிகாரி போல் நடித்து சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து போலியாக நேர்முக தேர்வு நடத்தியது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அவரிடம் இருந்து போலி பணி நியமன ஆணைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |