புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூரில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் 8 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை வாங்கி மோசடி செய்துள்ளார்.
அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சங்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.