Categories
மாநில செய்திகள்

அரசே கொள்முதல் செய்ய வேண்டும்…. தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்….!!!

தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் கொள்முதல் விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகள் கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கும் உண்மை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி விலை 170 வரை விற்பனையானது. பல  காய்கறிகளின் விலை 100க்கு மேல் உயர்ந்தது. இருப்பினும் இந்த விலை உயர்வால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. எனவே தமிழகத்தில் காய்கறிகள், பழங்களுக்கான கொள்முதல் விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |