Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசை உடனே கலைங்க ஸ்டாலின்…! மீண்டும் தேர்தல் நடத்துவோம்…. மோதிப்பாக்கலாம் ரெடியா ? சவால் விடும் அதிமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் ஸ்டாலின் திராணி இருந்து, தைரியமிருந்தால் சட்ட மன்றத்தை கலைத்து விட்டு தேர்தலை நடத்த தயாரா ?  அப்படி  நடத்தினால்  ஒரு தொகுதி கூட தமிழ்நாட்டில் நிச்சயமாக வர முடியாது. அந்த அளவுக்கு  மக்களுடைய வேகமான அதிர்த்தியை இந்த எட்டு மாதத்தில் சம்பாதித்துள்ளது திமுக அரசு

தேர்தல் காலத்திலலே  கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு, மக்களுக்கு எதுவுமே செய்யாமல் ஒரே ஒரு பணியாக இன்றைக்கு ஒரு பழிவாங்கும் செயல் மட்டும் செய்து வருகின்றது.  எத்தனையோ சவால்களை, எத்தனையோ சோதனைகளை, எத்தனையோ அடக்குமுறைகளை எல்லாம் சந்தித்து மாபெரும் வெற்றி கண்ட இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

பொன்மன செம்மல்டாக்டர் எம்.ஜி .ஆர் 1972 லே இந்த இயக்கம் ஆரம்பித்த காலத்திலிருந்து எத்தனையோ சோதனைகளை தாங்கி சாதனை படைத்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இயக்கம். எனவே இந்த ரெய்டு, இந்த போலீசை விட்டு ஏவல் தந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அடக்கிவிடலாம், ஒழித்து விடலாம் என நினைத்தால் அவர்கள் நினைப்பு தான்  முழுமையாக மண்ணை கவ்வுமே ஒழிய அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேற போவது கிடையாது என தெரிவித்தார்.

Categories

Tech |