Categories
உலக செய்திகள்

அரச குடும்பத்தில் என்னதான் நடக்கிறது?…. ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளும் மேகன்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இளவரசர் ஹரியின் மனைவியான மேகன் ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம்  தேதி பால்மோரல் அரண்மனையில் வைத்து உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அரச குடும்பங்கள் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் velentine low என்பவரின் courtiers: the Hidden Behind the crown என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் அரச குடும்பத்தின் உள்ள இளவரசர்களில் ஒருவர் ஹரி. இவர் கடந்த 2018- ஆம் ஆண்டு மேகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் மேகன் பலமுறை ஊழியர்களிடம் கோபமாக நடந்து கொண்டுள்ளார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து அவரிடம் பணிபுரிந்த முன்னாள் உதவியாளர் ஒருவர் கூறியதாவது. இளவரசர் ஹரி மற்றும் மேகனிடம் நான் பல ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன். எனக்கு நல்ல அனுபவம் உள்ளது. இவர்கள் சிறிது நாட்கள் இரவு உணவிற்காக வெளியே சென்று விடுவார்கள். ஆனால் மேகன் பணியாளர்களை திட்ட வேண்டும் என்பதற்காக பலமுறை  பணியாளர்களை அழைத்து திட்டுவார். அதேபோல் என்னை இருவரும் சேர்ந்து  10  நிமிடத்திற்கு குறையாமல் திட்டியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |