Categories
அரசியல்

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாம்” அப்படி இருக்கு இவரு பேச்சு…. அண்ணாமலை விமர்சனம்…!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக இருந்தவர்கள் ஆளுநராக பொறுப்பேற்ற இடங்களில் சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும், அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல கே.எஸ் அழகிரி பேசியதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.  இதுகுறித்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக அண்ணாமலை, ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள் ஆளுநராக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார்கள். கவர்னராக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தகுதி இல்லை என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி அவர்கள் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தான். இப்படி ஐபிஎஸ் அதிகாரிகளாக இருந்து ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள் சென்ற இடங்கள் எல்லாம் சிறப்புதான் செய்துள்ளார்கள். எந்த ஒரு தப்பான விஷயங்களையும் அவர்கள் செய்யவில்லை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கிராமத்தில் சொல்வார்கள். அது போல கே.எஸ் அழகிரி அவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை மறக்க வேண்டுமென்பதற்காக இது போல் பேசிக் கொண்டிருக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |