உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, இந்த தேசத்தின் முன் சில சவால்கள் எழும்போது குறிப்பிட்ட வம்சத்தினர் அதில் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள நினைக்கிறார்கள். பாதுகாப்பு படைகளையும் மக்களையும் விருந்தாக்கி அவர்கள் தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.
நோய் தொற்று தொடங்கி தற்போது உக்ரைன் விவகாரம் வரை அனைத்திலும் இவர்களின் அரசியல் ஆதாயம் தேடும் செயல் நன்றாக தெரிகிறது. கண்மூடித்தனமான எதிர்ப்பு, விரக்தி மக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தை விடுத்து அரசியல் ஆதாயத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்கள். அரண்மனைகளில் ஜோராக வாழ்பவர்களுக்கு கழிவறை இல்லாத ஏழைகள் படும் கஷ்டம் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.