அரண்மனை 3 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது . இதைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஹன்சிகா, திரிஷா, சித்தார்த், வைபவ் நடிப்பில் அரண்மனை 2 திரைப்படம் வெளியானது .
#Aranmanai3 👻👻👻 First look Tom at 11 am 🔥🔥🔥#SundarCinAranmanai3#அரண்மனை3#aranmanai3motionposter
An #AvniCineMax Production@RaashiiKhanna_ #sundarc @iYogiBabu @ssakshiagarwal @uksrr @CSathyaOfficial @FennyOliver @khushsundar @johnsoncinepro @DuraiKv
@decteamworks1 pic.twitter.com/05Z9cil3sY— Arya (@arya_offl) April 21, 2021
தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 3 திரைப்படம் தயாராகியுள்ளது . இந்த படத்தில் ஆர்யா, ராசி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.