Categories
சினிமா தமிழ் சினிமா

‘அரண்மனை-3’ ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட குஷ்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகை குஷ்பு அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை-2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம்  உருவாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர்.சி, ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, யோகி பாபு, நளினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குஷ்பூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்குக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் குஷ்பூ அரண்மனை-3 படத்தின் முக்கிய அப்டேட்டை டுவிட்டரில்  வெளியிட்டுள்ளார். அதில் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாகவும், அடுத்த மாதம் திருவிழா நேரத்தில் இந்த படம் ரிலீஸாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |