விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு ஆஷ்னா சாவேரி நடனமாடி வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்துள்ளார். அண்மையில் இத்திரைப்படத்திலிருந்து அரபிக் குத்து பாடல் வெளியானது.
இது ரசிகர்களை கவர்ந்ததோடு பிரபலங்களையும் கவர்ந்துள்ளது. இத்திரைப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் நடனமாடி இணையத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஆஷ்னா சாவேரி அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோவை தனது வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகின்றது.