இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கொடூரமான முறையில் அரங்கேறி வருவதால் வெளியே செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது.
இந்நிலையில் பாலியல் குற்றவாளிகளுக்கு அரபு நாடுகள்போல கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். பாலியல் வன்கொடுமைசெய்து கட்டாய திருமணத்திற்கு வற்புறுத்தியதால் பெரம்பலூர் சிறுமி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்யவேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.