வரலாற்றிலே முதல்முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் முன்னணி நாடுகளாக விளங்குவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். இங்கு தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த நாட்டில் சட்டப்படி எவ்வளவு காலம் வேலை செய்தாலும், வெளிநாடுகளில் இருந்து வேலை செய்பவர்களுக்கு குடியிருமை வழங்கப்படாது. மற்ற வளைகுடா நாடுகளிலும் இதே நிலைமைதான் உள்ளது. இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டு குடியுரிமை வழங்க ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் அரபு தேசத்தின் பொருளாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி,துபாய்,அபுதாபி போன்ற நாடுகளில் ஏராளமான வெளிநாட்டு நவெளிநாட்டினர் பணிபுரிகின்றனர். அதில் இந்தியர்கள் அதிகளவில் வேலை செய்து குறிப்பிடத்தக்கது.