Categories
மாநில செய்திகள்

அரவக்குறிச்சி தொகுதியில்… அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு…!!

பாஜகவை சேர்ந்த அண்ணாமலை வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சியாக இந்த தேர்தலில் களம் காண்கின்றனர்.

மேலும் பாஜகவை சேர்ந்த அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் சிக்கல் ஏற்பட்டது. தன் மீதான வழக்குகள் குறித்து வேட்புமனுவில் அண்ணாமலை சரியாக குறிப்பிடவில்லை என எதிர்க்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளதால் அண்ணாமலையின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்திருந்தனர். தற்போது அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது அதேபோல் தாராபுரம் தொகுதியில் பாஜக மாநில தலைவர் எல் முருகனின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

Categories

Tech |