நீடாமங்கலத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்காக சென்னைக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து சென்னை மாவட்டத்திற்கு அரவை செய்வதற்காக 2000 டன் நெல் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பப்பட்டது. இதனால் ராஜகோபாலபுரம், ஆதனூர், பாமணி, அரவத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து திறந்தவெளி சேமிப்பு மையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை 150 லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் மூலம் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டதையடுத்து சரக்கு ரயில் சென்னைக்கு புறப்பட்டது.