Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அரவை ஆலை உரிமையாளர்கள் கவனத்திற்கு” சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  அரசு நேரடி  கொள்முதல் நிலையங்களில் இருந்து சேகரிக்கும் நெல்லை அரிசியாக மாற்றி தமிழ்நாடு வாணிப கழகத்திற்கு அனுப்பும் வரை உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் சங்கிலி மேலாண்மை திட்டத்தின் கீழ் தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே  இதில் சேர விரும்பும் அரவை ஆலைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சிறு தொழில் மையம் நாகர்கோவில் – 4 என்ற முகவரிக்கு  நேரில் சென்றோ அல்லது 40652-261214 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு  தங்களது விவரங்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |