நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நலனை கருத்தில் கொண்டு கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் 80 கோடிக்கும் மேலான வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை, எளிய மக்களுக்கு தீபாவளி வரை உணவு தானியங்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரசி ஜூன் மாதத்தில் அரசி அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மொத்தமாக விநியோகிக்கப்படும் அரிசி விவரம் ரேஷன் கடை விளம்பரப் பலகைகளில் விளம்பரப்படுத்தப்படும். அரிசி குடும்ப அட்டைதாரர்கள் தேவைக்கேற்ப, புழுங்கல் அரிசி, பச்சரிசி என வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.