அரிசி ஆலைக்குள் புகுந்து பொருட்களை சேதபடுத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் பரமேஸ்வரன் நகர் பகுதியில் அரிசி ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செந்தில் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபாவளி அன்று செந்தில் அரிசி ஆலையை மூடி விட்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த கவிமணி மற்றும் இளவரசன் ஆகிய 2 வாலிபர்கள் அரிசி அறைக்குள் புகுந்து அங்கிருந்த மின்விசிறி, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையறிந்த செந்தில் உடனடியாக ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இளவரசன், கவிமணி ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.