சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய அரிசி ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேதியரேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளதாக மானாமதுரை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அரிசி ஆலையில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது 125 ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் 5 மூட்டை பருப்பு ஆகியவை இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அரிசி மற்றும் பருப்பு முட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆலையின் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.