Categories
தேசிய செய்திகள்

அரிசி முதல் பால் வரை…. இந்த பொருட்களின் விலை எல்லாம் உயரப்போகுது…. அதிர்ச்சி தகவல்….!!!!

சமீபகாலமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் தான். இந்நிலையில் சில அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை மேலும் உயரக்கூடும் என்றும் விரைவில் அது அமலுக்கு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்கள், அரிசி, கோதுமை, தானியங்கள், அப்பளம், இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயருகிறது.

இதற்கான காரணம் என்னவென்றால்,சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பிராண்டிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், சீஸ், லிஸ்ஸி, பன்னீர், அரிசி, கோதுமை மாவு, தானியங்கள், தேன், அப்பளம், வெள்ளம்,இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றிற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஜிஎஸ்டி வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதனால் ஜூலை பதினெட்டாம் தேதி முதல் மேற்கூறிய பொருட்களின் விலை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.இந்த ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி பேக்கேஜி செய்யப்பட்ட மற்றும் பிராண்டிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |