ஆவடி அருகே டானியா என்ற சிறுமி அரிதாக ஏற்படும் முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதிலிருந்து குணமடைய தனக்கு முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், பள்ளியில் என்னை யாரும் விளையாட சேர்ப்பதில்லை. எனக்கு பாடம் நடத்துவதில்லை.
தண்ணீர் குடிக்கும் தமிழரை எடுத்தால் துடைத்துவிட்டு பயன்படுத்துகிறார்கள்.இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு அழுகை வருகிறது என்ற கவலையுடன் கூறியுள்ளார்.இது கேட்போரை அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக உள்ளது. எனவே தமிழக அரசு தங்கள் மகளுக்கு உதவவேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.