சென்னை பல்கலைக்கழகத்தில் அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு ஒன்று வழங்கப்படுவதாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் அரியர் மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு ஒன்று வழங்கப்படுவதாக பதிப்பாளர் மதிவாணன் தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 2015க்கு முன் படிப்பில் சேர்ந்து பரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் நடப்பு செமஸ்டரில் தேர்வு எழுதலாம். மேலும் 2021 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் செமஸ்டர் தேர்விலும் பங்கேற்று தேர்ச்சி அடையலாம்.
அவ்வாறு தேர்வு எழுத விருப்பம் கொள்ளும் மாணவர்கள் அனைவரும் அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.