தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களின் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அப்போது குருவனம் காலம் என்பதால் மாணவர்களுக்கு தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளின் மூலம் கல்லூரிகளில் பயின்று பல ஆண்டுகளாக தேர்வில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணைக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன. அவ்வகையில் தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்ட சில கல்வி நிபுணர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் அரியர் தேர்வு எழுதாத எந்த ஒரு மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கக்கூடாது என்று.