அரியர் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் பட்டப் படிப்பில் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் அரிய தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்த 1 முதல் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டதை ஏஐசிடிஇ ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. இதனையடுத்து அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு அரியர் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.