அரியர் மாணவர்கள் தேர்ச்சி பற்றிய வழக்கு விசாரணை யூட்யூபில் ஒளிபரப்பாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழல் உருவாகியது. அதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மற்றும் அரியர் வைத்துள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்தது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணை யூடியூபில் ஒளிபரப்பாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழக்கில் தொடர்பில்லாதவர்களை உள்ளே அனுமதிக்காத நிலையில் யூடியூபில் விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் நீதிபதிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளது.