அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் 2001–2002 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் அம்மாணவர்கள் இந்த மாதம் நடைபெறும் அரியர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது கடந்த முறை நடந்த இளங்கலை செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் அடுத்து நடைபெற இருக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. அரியர், ஸ்பெஷல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களும் முழு மற்றும் பகுதி நேரம் படிக்கும் மாணவர்களும் இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இப்போது இந்த அரியர் தேர்வுக்கான கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது. இவற்றில் பாட வாரியாக காலை மற்றும் மாலை நடைபெறும் தேர்வின் தேதி, நேரம் குறித்த முழு விபரங்களும் வெளியிடப்பட்டு உள்ளது. ஆகவே தற்போது அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் இந்த தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.