Categories
மாநில செய்திகள்

அரியலூரில் ஹைட்ரோ கார்பன்…. திருமாவளவன் கண்டனம்….!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஓஎன்ஜிசி நிறுவனம் அரியலூரில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு கிணறுகளை அமைக்க தமிழ்நாடு அரசிடம் சுற்றுச்சூழல் அமைதி கோரி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அவர் கண்டனத்தை பதிவு செய்தார்.

Categories

Tech |