அரியவகை மீனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்கு ஊளி, விளாங்கு மீன், பாறை போன்ற பல்வேறு வகை மீன்கள் விற்பனை செய்யப்படும்.
இந்நிலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட கருசுறா மீன் வகை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த அரிய வகை மீன்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர். இந்த மீன் கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.