நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மாநில அரசுகள் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த தொடங்கியுள்ளன. அதன்படி ஹரியானா மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூன் 28-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு போது காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மால்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறக்கவும், உணவு விடுதிகள் மற்றும் பார்களை 50% வரை அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.