அரியானாவில் இரவுநேர விடுதியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் திடீரென ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சிசிடிவி காட்சியானது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரியானா மாநிலம் பஞ்சகுலா மாவட்டத்தில் இரவு நேர விடுதியில் திடீரென்று நண்பர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அப்போது விடுதிக்கு வெளியில் 4 பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டில் விடுதி பாதுகாவலர் மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் பலத்த காயமடைந்தனர்.
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்திய மோஹித் என்பவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.