Categories
தேசிய செய்திகள்

அரிவாளுடன் வந்த கொள்ளையனை அடித்து விரட்டிய பெண்…!!

வீச்சி அரிவாளுடன் நகைக்கடையில் கொள்ளையடிக்க வந்த திருடனை பெண் ஒருவர் நாற்காலிகள் சரமாரியாக தாக்கி தலைதெறிக்க ஓட வைத்த சிசிடிவி காட்சி மிரள வைத்துள்ளது.

கர்நாடகா மாநிலம் சிருங்கேறியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வீச்சி அரிவாளுடன் புகுந்த திருடன் அங்கு இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி ஓட வைத்துள்ளான். கடையில் இருந்த நகைகளை அள்ளி திணிக்கும் போது எதிர்பாராமல் ஒரு பெண்மணி நாற்காலியை எடுத்து அவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனை எதிர்கொள்ள முடியாத கொள்ளையன் நகைகள் மற்றும் வீச்சி அரிவாளை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டான்.  தப்பி சென்ற கொள்லையனை சிசிடிவி காட்சியை வைத்து கைது செய்யும் முயற்சியில் சிருங்கேறி போலீசார் ஈடுபட்டுள்ளனர். வீச்சி அரிவாளுடன் வந்த கொள்ளையனை  அடித்து விரட்டிய பெண்மணிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |