Categories
மாநில செய்திகள்

அருங்காட்சியகங்கள் திறப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் …!!

தமிழகத்தில் அருங்காட்சியகங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நவம்பர் 10-ஆம் தேதி அருங்காட்சியகங்கள் திறக்கப்படும் நிலையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் அருங்காட்சியகத்திற்கு செல்லும் பார்வையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 மணி நேரத்திற்கு ஒருமுறை அருங்காட்சியகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் 23 முதல் 30 டிகிரி வரை குளிர்சாதன வசதியை பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் பால்க் புக்கிங் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகம் திறந்திருக்கும் நேரத்தை 30 நிமிடங்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாம் என்றும் பார்வையாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனைகள் மேற்கொள்ள போதுமான அளவு தெர்மல் ஸ்கேனர் கருவிகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அருங்காட்சியகத்தின் உள்ளே வருவதற்கு ஒரு வழியையும் வெளியே செல்ல மற்றொரு வழியையும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அருங்காட்சியகங்களில் பொருட்கள் சிலைகளை பார்வையாளர்கள் தொடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |