நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-170 திரைப்படத்தை இயக்கப்போவது யார் மற்றும் தயாரிப்பது யார் என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். ரஜினிகாந்த்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என அழைப்பார்கள். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் இடம்பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் படம் அமையவில்லை. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம் தனது அடுத்த படத்திற்கான கதையை மிகவும் கவனமாக கேட்டு வந்தார்.இந்நிலையில் இளம் இயக்குனரான நெல்சன் திலீப் குமாரின் கதை இவருக்குப் பிடித்துப்போனது.
இதனால் தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது மற்றும் அனிருத் இசையமைக்கின்றார். மேலும் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இப்படப்பிடிப்பானது மே மாதத்தில் தொடங்க உள்ளதாக கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து ரஜினியின் 170 திரைப்படத்தை இயக்கப்போவது யார் என தெரியவந்துள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். அருண்ராஜா காமராஜ் இயக்குகின்ற நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தொடர்ந்து ரஜினியின் 170 திரைப்படத்தையம் போனிகபூர் தயாரிக்கின்றார். இது தொடர்பாக அதிகாரபூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் இடையே எதிர்பார்க்கப்படுகின்றது.