Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“அருப்புக்கோட்டை சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துக்கள்”…. அபாயம் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. மக்கள் கோரிக்கை….!!!!!

அருப்புக்கோட்டை சாலையில் வேகத்தடை அமைத்து தரக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை சிவன் கோவில் சந்திப்பில் இருந்து எஸ் .பி.கே பள்ளி சாலை வழியாக புறவழிச் சாலைக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றது.

ஆனால் அந்த சாலையில் வேகத்தடை எதுவும் இல்லை. இதனால் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் நடந்து விடுகிறது. ஆகையால் இங்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Categories

Tech |