இலையப்பம் செய்ய தேவையான பொருள்கள் :
தேங்காய் – தேவைக்கு
பாசிப்பருப்பு – 1/4 கிலோ
வாழை இலை- தேவைக்கு
ஏலக்காய் – 4
வெல்லம் – 1 கிலோ
மைதாமாவு – 1 கிலோ
முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். வறுத்தபின் அரிசியில் கல் நீக்குவது போல நீர்விட்டு கல் எடுப்பது எளிது.
அதன் பின் வெல்லத்தை பொடிபொடியாக துருவிக்கொள்ளவும். துருவாமல் உடைத்து மிக்சியில் ஒரு தடவை அரைத்தாலும் போதும்.ஏலக்காயை மெலிதாக பொடித்து வைத்துக்கொள்ளவும்.வாழை இலையை ஈரத்துணியால் துடைத்து தீயில் லேசாக காட்டி வாட்டி வைத்துக்கொள்ளவும்.
பின்பு இதனால் மடக்கும் போது கிழிந்துவிடாமல் இருக்கும்.பின்பு மாவில் பொடித்த ஏலாக்கை பொடியை கலந்து சிறிது நீர் விட்டு கெட்டியாக பிசைந்து வைத்துக்கொள்ளவும்.
பின் இலைகளை விரித்து வைத்து அதன் மீது பிசைந்த மாவை ஒரு உருண்டை வைத்து மெலிதாக சிறிய சப்பாத்தி போல பரத்தவும்
அடுத்தது மாவு கைகளில் ஒட்டாமல் இருக்க கையில் நீர் தொட்டுக்கொள்ளவும்.மாவு அதிகம் வேண்டாம். அதிகம் இருந்தால் சரியாக வேகாது.
பின்னர் இட்லி அவிக்கும் பாத்திரத்தில் நீர்விட்டு கீழே ஒரே ஒரு தட்டு வைத்து அதன் மீது அனைத்து இலையப்பத்தை இலை ஓரங்களையும் மாவு வெளியே தெரியாக படி நன்றாக மடக்கி வைத்து வேக விடவும்